புழல் ஏரியில் மின்மோட்டார் பொருத்தும் பணி தீவிரம்...

சென்னை புழல் ஏரியில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் நீரை எடுக்க, மின்மோட்டார்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புழல் ஏரியில் மின்மோட்டார் பொருத்தும் பணி தீவிரம்...
x
சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றான புழல் ஏரியில் 2 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. எனவே, ஏரியில் ஆங்காங்கே நீர்குட்டை போல் தேங்கி கிடக்கும் தண்ணீரை எடுத்து பயன்படுத்த மின்மோட்டார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிறிய அளவில் வாய்க்கால் போன்று வெட்டி ஒரே இடத்துக்கு தண்ணீரை கொண்டு வந்து, மின்மோட்டார்கள் மூலம் குழாய்களில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி ஓரிரு நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் எடுத்து முடித்தவுடன் தூர்வாரும் பணி தொடங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்