பொள்ளாச்சி விவகாரம் : மேலும் ஒருவர் சரண்

சரணடைந்த மணிவண்ணனுக்கு 8ம் தேதிவரை சிறை
பொள்ளாச்சி விவகாரம் : மேலும் ஒருவர் சரண்
x
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை விவகாரத்தில் புகாரளித்தவரின் அண்ணனை தாக்கிய வழக்கில் குற்றவாளி மணி என்கிற மணிவண்ணன், நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரான மணிவண்ணனை வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில், பாபு, வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகியோர் மீது பொள்ளாச்சி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ள நிலையில், மணிவண்ணன் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்