டூவீலர் மீது கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
பதற வைக்கும் சிசிடிவி காட்சி
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில், பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story