பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை

ஓசூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
x
பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவி மற்றும் அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார். இந்நிலையில், தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதோடு, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேல்முறையீடு வழக்கில் விசாரணை முடியும் வரை சிறை தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்