முகிலனை தீவிரமாக தேடி வருவதாக சி.பி.சி.ஐ.டி. உயர் நீதிமன்றத்தில் அறிக்கை

வழக்கை ஏப். 8க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவு
முகிலனை தீவிரமாக தேடி வருவதாக சி.பி.சி.ஐ.டி. உயர் நீதிமன்றத்தில் அறிக்கை
x
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் காணாமல் போன சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக்கோரி, மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதிலும் 40 தனிப்படையினர் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பெண் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று விசாரணையின் போது ஒரு பெண் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்த கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை ஏப்ரல் எட்டாம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், முகிலனின் செல்போன் சிக்னல்கள் மூலம் அவர் சென்ற இடங்களை விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்