பொள்ளாச்சி பயங்கரம் : திருநாவுக்கரசு வீட்டில் என்ன நடந்தது?

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. தலைமையிலான 5 பேர் குழு விசாரணையை துவக்கி உள்
x
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை, சிபிசிஐடிக்கு மாற்றி, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், கோவை மாவட்டம், சின்னம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில், சிபிசிஐடி ஐ.ஜி. ஸ்ரீதர், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, திருநாவுக்கரசு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், வீட்டருகே உள்ள குப்பை கிடங்கில் ஆணுறைகளும், மது பாட்டில்களும் இருந்தது தெரிய வந்துள்ளது. சோதனையை முடித்து கொண்ட போலீசார், தடயங்களை சேகரித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்