சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

"2 பாதுகாப்பு உற்பத்தி தளவாட நெடும்பாதை"
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
x
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனிமேல் எம்.ஜி.ஆர் ரயில் முனையம்  என்று அழைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதனை அறிவித்தார்.தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் மற்றும் வரும் விமானங்களில் இனி தமிழில் அறிவிப்புகள் இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதோடு, வருவாயும் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நெடும்பாதைகள் 2 அமைக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய இயலாது என்றும் பிரதமர் மோடி சாடியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்