இலவச கட்டாய கல்வி - தனியார் பள்ளிகளுக்கு நிதி

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 2017-18 கல்வியாண்டு வரையில் மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு கட்டணம் வழங்குவதற்காக 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவச கட்டாய கல்வி - தனியார் பள்ளிகளுக்கு நிதி
x
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 2013-14 ம் கல்வி ஆண்டு முதல் 2017-18 ம் கல்வி ஆண்டு வரையில் 3 லட்சத்து 30ஆயிரத்து 596 மாணவர்கள் பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-19 ம் கல்வியாண்டில் சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 248 கோடியே 75 லட்சத்து 87 ஆயிரத்து 118 ரூபாயும், மிக விரைவில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்