விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் நிதியுதவி நம்பிக்கையை ஏற்படுத்தும் -அமைச்சர் உதயகுமார்

விவசாயிகளுக்கும் உதவும் வகையில் இ-அடங்கல் என்ற செல்போன் செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
x
விவசாயிகளுக்கும் உதவும் வகையில் இ-அடங்கல் என்ற செல்போன் செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்த செயலியை அறிமுகம் செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த செயலின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்த பயிர் விவரங்களை தாங்களே பதிவேற்றம் செய்யலாம் என்றார்.இ-அடங்கல் மூலம் பெறப்படும் தகவல்கள் துல்லியமாக இருக்கும் என்பதால், கொள்கை முடிவுகள் எடுக்க அரசுக்கு உதவியாக இருக்கும் என கூறினார். பேரிடர் காலங்களில் சேத கணக்கீட்டுக்கும், நிவாரணங்களை விரைந்து வழங்கவும் இ-அடங்கல் செயலி உதவி எனவும் அமைச்சர் உதயகுமார் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்