பிளாஸ்டிக் ஒழிப்பு : 10,000 கி.மீ விழிப்புணர்வு பயணம் செய்யும் சாதனை பெண்

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி உதகையில் பயணத்தை தொடங்கிய விழிப்புணர்வு பிரச்சார இரு சக்கர வாகனம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வந்தடைந்தது.
பிளாஸ்டிக் ஒழிப்பு : 10,000 கி.மீ விழிப்புணர்வு பயணம் செய்யும் சாதனை பெண்
x
பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி உதகையில் பயணத்தை தொடங்கிய விழிப்புணர்வு பிரச்சார இரு சக்கர வாகனம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வந்தடைந்தது. திருப்பூரை சேர்ந்த சைபிமேத்யூ என்ற பெண்மணி பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே பயணம் செய்யும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த மாதம் 3 -ம் தேதி உதகையில் தொடங்கினார். இந்நிலையில் குடியாத்தம் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  33 மாவட்டங்கள், 33 நாட்கள்,10,000 கிலோமீட்டர் என ஊட்டியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் சென்னையில் வரும்  7-ம் தேதி நிறைவடைகிறது.

Next Story

மேலும் செய்திகள்