பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் - அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி பேராசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு நிறுத்த வேண்டும் எனக் கூறி அரசு கல்லூரி பேராசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
x
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி பேராசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு நிறுத்த வேண்டும் எனக் கூறி அரசு கல்லூரி பேராசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்ட நிலையில், 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, சென்னை அண்ணாசாலையில் அரசு கல்லூரி பேராசிரியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். நடவடிக்கை எடுக்கப்படாது என்ற முதலமைச்சரின் உறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்