இரு கட்சியினரிடையே பயங்கர மோதல் - பதற்றம்

திருவாரூர் அருகே இரண்டு கட்சியினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார்
இரு கட்சியினரிடையே பயங்கர மோதல் - பதற்றம்
x
திருவாரூர் அருகே இரண்டு கட்சியினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். குடவாசலை அடுத்த மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்த அறிவானந்தம் என்பருக்கும் மாற்றுக்கட்சியை சேர்ந்த ஆரோக்கிய செல்வம் என்பவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே தீபங்குடி வெட்டாற்றங்கரை பகுதியில் பயங்கர மோதல் ஏற்பட்டது. கடும் ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டும், நாட்டு வெடிகுண்டு வீசியும் நடைபெற்ற சண்டையில் 5 இரு சக்கர  வாகனங்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்