மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வம் ஏற்படுத்த பயிற்சி - இஸ்ரோ தலைவர் சிவன்

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்த, கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
x
மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்த, கோடை விடுமுறையில்  பயிற்சி அளிக்கப்படும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 
பி.எஸ்.எல்.வி. சி 45 என்ற ராக்கெட் அடுத்த மாதம் 21ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்றார். அதைத் தொடர்ந்து, சந்திரயான் 2 செயற்கைகோள் ஏப்ரல் மாத இறுதியில் விண்ணில் ஏவப்படும் எனவும் சிவன் கூறினார். 
மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், 8ஆம் வகுப்பு முடிந்த  மாணவர்கள் 108 பேருக்கு கோடை விடுமுறையில் இஸ்ரோ மையத்தில் பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்