பள்ளிக்கல்வித்துறை ரூ.2500 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
x
பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தார் சாலைகள் மற்றும் சாக்கடைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்