பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சென்னையில் பெட்ரோல், விலை 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 73 ரூபாய் 72 காசுகளாகவும், டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 69 ரூபாய் 91 காசுகளாகவும் உள்ளது
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு
x
 சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 73 ரூபாய் 72 காசுகளாகவும், டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 69 ரூபாய் 91 காசுகளாகவும் உள்ளது

Next Story

மேலும் செய்திகள்