தொகுதி பங்கீட்டு குழுவினருடன் ஸ்டாலின் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் தொடர்பாக , தொகுதி பங்கீட்டு குழுவினருடன், திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தொகுதி பங்கீட்டு குழுவினருடன் ஸ்டாலின் ஆலோசனை
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும்,  திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்தும் இதனால் கூட்டணிக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்