ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் - ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
பதிவு : பிப்ரவரி 14, 2019, 01:29 AM
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ சார்பில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களில், ஆயிரத்து 186 பேரை சஸ்பெண்ட் செய்தும், பணியிட மாறுதல் செய்தும் கல்வித் துறை உத்தரவிட்டது. மேலும், 17 -பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், செய்முறைத் தேர்வு மற்றும் பிரதான தேர்வு நடைபெற உள்ளதால், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார். 
எனினும், பணியிட மாறுதல் மற்றும் 17-பி பிரிவின் கீழான நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பிற செய்திகள்

அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை : பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

33 views

பியூஷ் கோயலுடன் தம்பிதுரை சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார்.

64 views

பைஜூ கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

வங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

169 views

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதிநீரை நிறுத்த முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

32 views

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் வருமானவரித்துறை சோதனை

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அவரது சகோதரர் காமராஜ், நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் திருமண மண்டபத்தில், வருமானத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.