அறிவியல் பாடங்களை 10-ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்க வேண்டும் - துணைவேந்தர் சூரப்பா

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை 10-ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.
x
18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்ற தலைவர் மணியம், கிண்டி பொறியியல் கல்லூரி தலைவர் கீதா, கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய துணைவேந்தர் சூரப்பா, தாய் மொழியை 
படிக்க இந்த தலைமுறையினர் தயக்கம் காட்டுவதாகவும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை 10-ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்