இன்று தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்...

சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்...
இன்று தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்...
x
2019 - 2020 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. காலை 10 மணிக்கு நிதித் துறை  பொறுப்பை வகித்து வரும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக பட்ஜெட்டை 8வது முறையாக பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், இந்த பட்ஜெட்டில் ஏராளமான சலுகை அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே,  சட்டப்பேரவையில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு, ஜாக்டோ - ஜியோ போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்