மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி...

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி...
x
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைகண்டு  அதிர்ச்சி அடைந்து போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் நடத்திய விசாரணையில்,  அவர், மாமாங்கம் முல்லை நகரில் வசித்து வரும் பூங்கொடி என்பதும், வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை வாங்க வீட்டு உரிமையாளரிடம் எட்டரை லட்சம் ரொக்கம்  கொடுத்ததும், பணத்தை வாங்கிக்கொண்டு உரிமையாளர் வேறு ஒருவருக்கு வீட்டை விற்றதும் தெரியவந்தது.  இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத விரக்தியில் இந்த முடிவை எடுத்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்