ஓட்டுனரிடம் அவதூறாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை : காவல் ஆணையரிடம் விசாரணை குழு அறிக்கை
ஓட்டுனரிடம் அவதூறாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் , தம்மை போக்குவரத்து காவலர்கள் அவதூறாக பேசியதாக கூறி கடந்த 25ஆம் தேதி மறைமலைநகர் அருகே தண்டவாளத்தில், ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான 68 போக்குவரத்து காவலர்களிடம் விசாரணை நடத்தியது .இதனை அடுத்து ராஜேஷிடம் அவதூறாக பேசிய இரண்டு காவலர்களும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்
Next Story

