8ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை...

சென்னையில் 8ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை...
x
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த அந்த மாணவி, மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். தந்தை இல்லாத நிலையில், இவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாய், தனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து கதறி அழுதுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்