கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு ஆதரவு - விக்கிரமராஜா
பதிவு : பிப்ரவரி 07, 2019, 04:28 AM
மத்திய பாரதிய ஜனதா அரசு வணிகர்களை புறக்கணித்து விட்டதாக விக்கிரமராஜா குற்றச்சாட்டு.
சேலத்தில் வர்த்தக சங்க நூற்றாண்டு விழாவில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பாரதிய ஜனதா அரசு வணிகர்களை புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டினார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று வேதனை தெரிவித்த அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே தங்கள் ஆதரவு இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.