பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை,கால்கள்: சிக்கலான வழக்கில் துப்பு துலக்கியது எப்படி?

சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் வீசப்பட்ட கை, கால்கள் தூத்துக்குடியை சேர்ந்த பெண்ணுடையது என போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்
x
* சென்னை பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கடந்த 21ஆம் தேதி வந்த லாரி ஒன்றில் ரத்தம் படிந்த நிலையில் பெண்ணின், கையும், 2 கால்களும் கண்டெடுக்கப்பட்டன. தலையும், உடலும் இல்லாததால், யார் அந்த பெண் என கண்டறிவதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது. 

* இது தொடர்பாக 6 தனிப்படை அமைத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், 2 வாரத்திற்கு பின், கை, கால்களுக்கு உரிய பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். 

* மிகவும் சிக்கலான இந்த வழக்கில், காவல்துறைக்கு துப்பு கிடைக்க உதவியது, காணாமல் போனவர்களின் பட்டியல் தொடர்பான புகார் தான் என கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர், அந்த பெண்ணின் உடல் உறுப்பு புகைப்படம் மற்றும் பெற்றோர் வாய்மொழியாக அளித்த புகார் குறித்து தனிப்படைக்கு தகவல் அளித்துள்ளார். 

* பின்னர், அந்த பெண்ணின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போலீசார், விசாரணை நடத்தினர். அதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தங்களது மகள் சந்தியாவை, சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த உதவி இயக்குநர் பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து கொடுத்ததாகவும், 2 வாரத்திற்கு மேலாக தனது மகளை காணவில்லை எனவும் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். 

* இதனை தொடர்ந்து சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன் மீது போலீசாருக்கு சந்தேகம் துளிர்த்தது. அந்த நபரை கைது செய்து, போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், உண்மை அம்பலமானது. 

* மனைவி சந்தியாவின் நடத்தை சரியில்லாததால், அவளை கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்ததாக பாலகிருஷ்ணன் ஒப்புக்கொண்டுள்ளார். கொலையாளியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

* இதனிடையே, அந்த பெண்ணின் மற்றொரு உடல் பாகம் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிக்கலான வழக்கில் துப்பு துலக்கிய, தமிழக போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்