பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என கூறி சொகுசு காரில் வலம் வந்த நபர் போலீசில் ஒப்படைப்பு...
பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என கூறி சொகுசு காரில் வலம் வந்த நபரை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என கூறி சொகுசு காரில் வலம் வந்த நபரை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் அந்த நபர் வேகமாக காரை ஒட்டி சென்ற போது மோதி 2 வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். இதையடுத்து காரை மடக்கி அதிலிருந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் போது அந்த நபர் போலி அடையாள அட்டையை காட்டியுள்ளார். அவருடைய காரில் நாடாளுமன்றம், , சிபிஐ , சர்வதேச போலீஸ் என பல ஸ்டிக்கர்களை வைத்திருப்பதும், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என கூறி வந்ததும் தெரிய வந்தது.
Next Story

