நெடுஞ்சாலைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

சென்னையில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெடுஞ்சாலைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...
x
சென்னை மெரினா கடற்கரை சாலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட தடை விதிக்க கோரி  வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தலைமை  வழக்கறிஞர் ஆஜராகி , ஏற்கனவே சட்டப்பேரவை வைர விழா வளைவு கட்டப்பட்ட போது பின்பற்றிய நடைமுறைகளையே எம்.ஜி.ஆர் நினைவு வளைவுக்கும் பின்பற்றப்பட்டதாக தெரிவித்தார். காமராஜர் சாலை சென்னை மாநகராட்சி சாலை தான் என்றும்,   வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளும் போது தடையில்லா சான்றிதழ் மட்டும் பெற்றால் போதும் என்றும்  அவர் விளக்கம் அளித்தார். ஏற்கனவே வைத்த வளைவை பின்பற்றி இந்த வளைவு என்றால், மெரினா கடற்கரை ஓரத்தில் சிலைகள் வரிசையாக உள்ளது போல, வளைவுகளும் வந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மறைந்த தலைவர் பெயரில் நினைவு வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சென்னை மாநகரத்தின் எந்த மாஸ்டர் பிளானின் கீழ் இந்த நினைவு வளைவு அமைக்கபடுகிறது என்பது குறித்தும்,  சென்னையில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு,   விசாரணையை  தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்