புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி - நிதி திரட்ட சைக்கிளில் உலகம் சுற்றும் நண்பர்கள்

நெதர்லாந்த் நாட்டினை சேர்ந்த ஒவ்க்கர், ஹெல்கின் ஆகிய இருவரும் 'சர்கோமா' என்ற புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட உலகம் முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்கள்.
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி - நிதி திரட்ட சைக்கிளில் உலகம் சுற்றும் நண்பர்கள்
x
நெதர்லாந்த் நாட்டினை சேர்ந்த ஒவ்க்கர், ஹெல்கின் ஆகிய இருவரும் 'சர்கோமா' என்ற புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட உலகம் முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி கடந்த 24 நாடுகளை கடந்து தற்போது இந்தியா வந்துள்ளனர். ஓமனிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து சைக்கிள் மூலம் ஆனைமலை வழியாக பொள்ளாச்சி வந்தனர். பின்னர், கிணத்துக்கடவு வழியாக கோயம்புத்துர் சென்று அங்கிருந்து ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு,  கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நேபாளம் செல்லும் இவர்கள், இந்தியாவில் 120 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

Next Story

மேலும் செய்திகள்