குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

எதிர் வரும் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
x
சென்னை தலைமைச் செயலகத்தில்  நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்க் கொண்டு சீராக குடிநீர் வினியோகம் செய்வது, கிருஷ்ணா நதிநீர்  பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது. விவசாயத்துக்கான தண்ணீர் தேவை, வனப் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து, வன உயிரினங்களை பாதுகாத்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது..  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.  இந்தாண்டு மழை பற்றாக்குறையாக பெய்ததால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்