ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு எதிரொலி

ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு நடந்ததன் காரணமாக, தற்போது மீண்டும் விடைத்தாள்களை திருத்தம் செய்யும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு எதிரொலி
x
தமிழகம் முழுவதும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதற்கான முடிவுகள் வெளியிடுவதை தேர்வுத்துறை ரத்து செய்தது. தற்போது விடைத்தாள்கள் அனைத்தும் புதிதாக மதிப்பீடு செய்யும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி எப்போது நிறைவுபெற்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என 15 ஆயிரம் மாணவர்கள் தவிக்கின்றனர். அதே நேரம், ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான அலுவலர்கள், ஆசிரியர்கள் மீது தேர்வு துறையும் பள்ளி கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்காக விசாரணையை விரிவடையச் செய்ய வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்