கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயான், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் இருவரும் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயான், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்
x
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் இருவரும் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சருக்கு எதிராக பேசியதாக, இருவரது ஜாமீனையும் ரத்து செய்ய கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி, சயான், மனோஜ் ஆகியோர்  நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைதொடர்ந்து, வரும் 2-ம் தேதி இருவரும் மீண்டும் ஆஜராக, உதகை அமர்வு நீதிமன்ற நீதிபதி 
வடமலை உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்