சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் திருட்டு : வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் திருட்டு : வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அஜித் என்பவர் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் தனது வாகனத்தை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்ததில் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் வந்து வாகனத்தை கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்