பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் ஓய்வு பெற்ற ஆசிரியரை கொண்டு கிராமமக்களே பாடம் நடத்தினர்
கும்பகோணம் அருகே பள்ளிக்கு ஆசிரியர்கள் யாரும் வராததால் ஓய்வு பெற்ற ஆசிரியரை கொண்டு கிராமமக்களே பாடம் நடத்தினர்.
கும்பகோணம் அருகே பள்ளிக்கு ஆசிரியர்கள் யாரும் வராததால் ஓய்வு பெற்ற ஆசிரியரை கொண்டு கிராமமக்களே பாடம் நடத்தினர். ஏனநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தால் கடந்த ஒரு வாரமாக இயங்கவில்லை. இதனால், பொதுமக்களே ஓய்வு பெற்ற ஆசிரியரை அழைத்து வந்து பாடம் நடத்தினர். சத்துணவு பணியாளர்களும் வராததால், கிராம மக்களே மாணவர்களுக்கு வீட்டிலிருந்து உணவும் தயாரித்து பரிமாறினர்.
Next Story