பிரதமரை சந்தித்தது மறக்க முடியாத நாள் - அருள்மொழி சரவணன் நெகிழ்ச்சி
பிரதமர் மோடியை சந்தித்தது தமது வாழ்வில் மறக்க முடியாத நாள் என அருள்மொழி சரவணன் நெகிழ்ச்சி.
முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று, ஆன்-லைன் வர்த்தகத்தை சிறப்பாக செய்து வருவதால் தான் பிரதமரை நேரில் சந்திக்க முடிந்ததாக மதுரையை சேர்ந்த அருள்மொழி சரவணன் தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, முத்ரா வங்கி திட்டத்தில் கடன் வாங்கி, வீடுகள், அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் தொழிலை செய்து வருவதாக தெரிவித்தார். அந்த வகையில் பிரதமர் அலுவலகத்துக்கு பிளாஸ்க் சப்ளை செய்ய வாய்ப்பு கிடைத்ததாகவும், அதன் பேரிலேயே பிரதமரின் அறிமுகம் கிடைத்ததாகவும் தெரிவித்த அருள்மொழி, இந்த திட்டத்தின் மூலம் நகர்புற மக்கள் மட்டுமல்ல, கிராமப்புற மக்களும் பயன்பெறலாம் என கூறினார். பிரதமர் மோடியை சந்தித்தது தமது வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றும் அவர் கூறினார்.
Next Story