புதுக்கோட்டையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு குவியும் விண்ணப்பங்கள்

2வது நாளாக ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்  பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு இரண்டாவது நாளாக இன்றும் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.  மாவட்ட கல்வி அலுவலகத்தில் குவிந்த அவர்களிடம், விண்ணப்பிக்கும் நாள் நேற்றுடன் முடிந்து விட்டதாக அதிகாரிகள் கூறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. வருகிற, திங்கட்கிழமை முதல் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்