தற்காலிக ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு

திங்கட்கிழமை பணிக்கு சேரவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தற்காலிக ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு
x
அரசு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு நேற்று சுற்றறிக்கை அனுப்பியது. இந்நிலையில், அவர்களுக்கு ஏற்கனவே 7 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இன்று அதனை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், வரும் 28 ஆம் தேதி பணிக்கு சேர வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்