இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர் கைது - கண்காணிப்பு கேமராவில் பதிவான திருட்டு

சிதம்பரத்தில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர் கைது - கண்காணிப்பு கேமராவில் பதிவான திருட்டு
x
சிதம்பரத்தில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள கானூரில் ஜெராக்ஸ் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக அதன் உரிமையாளர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதையடுத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடுவதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து வாகனசோதனையில் ஈடுபட்டபோலீசார், சிறுவாப்பூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, ஜெராக்ஸ் கடை முன்பு நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை அவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்