"ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்" -முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் -முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை  சுற்றறிக்கை
x
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது, 17 பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 7500 ரூபாய், சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல், ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியும், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் தொடங்க உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்