மத்திய சிறையில் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை - சிறைத்துறை தலைவர் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ் சேனல்களை ஒளிபரப்புவது குறித்து பிப்ரவரி 28 க்குள் முடிவெடுக்க தமிழக சிறைத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
மத்திய சிறையில் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை - சிறைத்துறை தலைவர் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன்  இது தொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுவில்,  மதுரை மத்திய சிறையில் ஆண்டனா முறையிலான தொலைக்காட்சி சேவையில் இந்தி மொழியில் மட்டுமே நிகழ்ச்சிகள், செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என்றும், இதனால் கைதிகளின் மன உளைச்சலை  குறைக்கும் விதமாக தமிழ் மொழியில் செய்திகள்,  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பு  இல்லை என்பதால், பிற சிறைகளில் உள்ளது போல் டிஜிட்டல் முறையில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்ப உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த  வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் , ஆதிகேசவலு அமர்வு, இதன் மீது பிப்ரவரி 28க்குள் நடவடிக்கை எடுக்க தமிழக சிறைத்துறை தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்