புது மணப்பெண் தற்கொலை - மாமியார், மாமனார் கைது

தலைமறைவாக உள்ள கணவருக்கு வலைவீச்சு
புது மணப்பெண் தற்கொலை - மாமியார், மாமனார் கைது
x
சென்னை ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்த மாதவிக்கு அதே பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் முருகனுடன் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இந்த நிலையில், மாதவி கடந்த 15-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.இதனையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக, மாமியார்  தானியம்மாள், மாமனார்அன்னியப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மாதவியின் கணவர் முருகனை போலீசார்  தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்