திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்புக்கு தடை? - உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்புக்கு தடை? - உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
x
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாமோதரன் என்பவர்  தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், கஜா புயல் நிவாரணப் பணிகள் முடிவடையாததால் இப்போதைக்கு இடைத்தேர்தல் தேவையில்லை என்ற அரசியல் கட்சிகளின் வலியுறுததலால் ஜனவரி 28ஆம் தேதி நடக்க இருந்த திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெறாமல் அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும், கடிதம் மூலம் தலைமை செயலர், கேட்டு கொண்டதற்காக தேர்தலை ரத்து செய்வது சட்டவிரோதம் என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே, இடைத்தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்பிற்கு தடை விதித்து, அந்த அறிவிப்பு செல்லாது என உத்தரவிட கோரி அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்