சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி பன்னீர்செல்வம் ஒத்துழைக்கவில்லை - பொன்.மாணிக்கவேல் புகார்

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது எது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
x
சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு  வசதிகளை செய்து கொடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,  இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன் மாணிக்கவேலுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 99 சதவீத வசதி மறுக்கப்பட்டுள்ளதாக பொன்மாணிக்கவேல் கூறினார். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை டிஎஸ்பி பன்னீர்செல்வம் வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டிய அவர், தேவை ஏற்பட்டால் அவரை கைது செய்யப்போவதாக தெரிவித்தார். இதையடுத்து, சட்டம் அனுமதித்ததால் கைது செய்யலாம் என தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற தடையாக இருப்பது எது என கேள்வி எழுப்பியதோடு, டிஜிபி பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்