பொறியியல் புதிய தேர்வு முறையை திரும்ப பெற முடியாது - அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா

பொறியியல் படிப்பிற்கான புதிய தேர்வு முறையை திரும்ப பெற முடியாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
x
பொறியியல் படிப்பிற்கான புதிய தேர்வு முறையை திரும்ப பெற வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய தேர்வு முறையை வகுத்தது பல்கலைக்கழக மானிய குழு தான் என தெரிவித்தார். சரியான தரமான பேராசிரியர்கள் இல்லாத கல்லூரிகளே இந்த முறையை எதிர்ப்பதாகவும், புதிய முறை குறித்து மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் சூரப்பா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்