சென்னையில் வாடகை சைக்கிள் திட்டம் : ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் மட்டுமே

வாடகை சைக்கிள் திட்டத்தை பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை மாநகராட்சி அமல்படுத்த உள்ளது.
x
சென்னையில் சைக்கிள் ஓட்டும் பழக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், சுமார் 10 சதவீதம் பேரே சைக்கிள் ஓட்டுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த பழக்கத்தை மக்களிடையே உருவாக்கவும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐதராபாத்தை சார்ந்த "ஸ்மார்ட் பைக்" என்ற நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி, நவீன வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக எழும்பூர், பெசன்ட்நகர், அடையாறு , மயிலாப்பூர்,  சென்ட்ரல், கிண்டி உட்பட சென்னை மாநகர் முழுவதும் 100 - க்கும் மேற்பட்ட இடங்களில்  சைக்கிள் நிறுத்தங்களும் அமைக்கப்பட்ட உள்ளன.  இந்த திட்டத்துக்கான கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜி.பி.எஸ்.  உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தற்காலத்திற்கு ஏற்ப இந்த சைக்கிள் தயாரிக்கப்பட்டு உள்ளது. மணிக்கு 5 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ள இந்த சைக்கிளை எடுத்த இடத்தில் தான் விடவேண்டும் என்று இல்லை. மாறாக 100-க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் விடலாம் என்பது சிறப்பு அம்சமாகும். முதற்கட்டமாக 250 சைக்கிள்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ள நிலையில், இந்த சேவையை பயன்படுத்த ஸ்மார்ட் பைக் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்