பேட்ட படம் டிக்கெட் பெறுவதில் தகராறு : 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு கத்திக்குத்து

திண்டுக்கல் அருகே, பேட்ட படத்தின் டிக்கெட்டை பெறுவதில் ஏற்பட்ட தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட பத்து பேர், அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.
பேட்ட படம் டிக்கெட் பெறுவதில் தகராறு : 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு கத்திக்குத்து
x
நந்தவனப்பட்டியை சேர்ந்த கண்ணன் ரஜினி ரசிகர் மன்ற ஒன்றியச் செயலாளராக உள்ளார்.  இவருக்கும் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் சிவாவிற்கும் முன் விரோதம் இருந்துள்ளது.  இந்நிலையில், பேட்ட படத்தின் ரசிகர்மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை சிவா தரப்பிரனருக்கு வழங்கியதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதில் சிவா மற்றும் அவரது நண்பர்கள் கண்ணன் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தியுள்ளனர். தடுக்க வந்த சிவாவின் மனைவி மற்றும் உறவினர்கள் 10 பேரை தாக்கியுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்