அகில இந்திய ஜூனியர் கராத்தே போட்டி : பதக்கங்களை குவித்தனர், பள்ளி மாணவர்கள்

அகில இந்திய ஜூனியர் கராத்தே போட்டி : பதக்கங்களை குவித்தனர், பள்ளி மாணவர்கள்
அகில இந்திய ஜூனியர் கராத்தே போட்டி : பதக்கங்களை குவித்தனர், பள்ளி மாணவர்கள்
x
அகில இந்திய அளவிலான ஜூனியர் கராத்தே போட்டியில் கொடைக்கானலை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர். கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 9 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்கள்  கலந்து கொண்டனர். இதில் டீம் கட்டா, கட்டா மற்றும்  பைட் ஆகிய பிரிவுகளில் பிசிகே பள்ளியில் படிக்கும்  இயேசு ராஜா,  சாமுவேல் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். அதே பள்ளியில் படிக்கும் ஜோன்ஸ் பைசல்,  ரகுமான் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். அதேபோல பல்வேறு பிரிவுகளில் 7 மாணவர்கள், 11 வெண்கலப் பதக்கங்களை  பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்