இன்றைய இசையமைப்பாளர்கள் இசையமைப்பாளர்களே அல்ல - இளையராஜா

இன்றைய இசையமைப்பாளர்கள் இசையமைப்பாளர்களே அல்ல என்றும், பல சிடி-க்களை வைத்து டியூன் போடுவதாகவும் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா குற்றம்சாட்டினார்.
x
இன்றைய இசையமைப்பாளர்கள் இசையமைப்பாளர்களே அல்ல என்றும், பல சிடி-க்களை வைத்து டியூன் போடுவதாகவும் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா குற்றம்சாட்டினார். 

சென்னை ராணிமேரி கல்லூரியின் கலை விழாவில் இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 75 வயதான அவருக்கு இது பவள விழா ஆண்டு என்பதால், கேக் வெட்டி கல்லூரி நிர்வாகத்தினர் கொண்டாடினர். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, தனது முதல் திரைப்படமான  அன்னக்கிளி பாடலை, ராணிமேரி கல்லூரி எதிரே உள்ள மெரினா கடற்கரையில் உருவாக்கியதாகத் தெரிவித்தார். இன்றைய இசையமைப்பாளர்கள் இசையமைப்பாளர்களே அல்ல என்றும், பல சிடி-க்களை வைத்து டியூன் போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பின்னர் மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்த அவர், பல பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

Next Story

மேலும் செய்திகள்