மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பூங்கா : தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் அமைப்பு

சென்னையில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பூங்கா, பார்வையற்றவர்களும் பயன்பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
x
சென்னை சாந்தோம் பகுதியில் அம்மா உணவகம் அருகே எல்லையற்ற விளையாட்டு பூங்கா என்ற பெயரில் இந்த பூங்கா திறக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் மாற்றுதிறனாளிகளுக்கென பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வீல் சேரில் அமர்ந்த படியே சுற்றிவரும் விதமாக  பூங்காவிற்குள் எட்டு வடிவிலான பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் , மன நலம் பாதித்த குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு குறைவான உயரத்தில் ஊஞ்சல், சீசா,ராட்டினங்கள் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மூலிகை செடிகள் அடங்கிய தோட்டங்களும், படம் வரைவதற்காக அமைக்கப்பட்ட சுவரும் இதன் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. மற்ற பூங்காக்களில் மற்றவர்கள் விளையாடுவதை பார்த்து விட்டு வேதனையுடன் திரும்பி வந்த மாற்றுத்திறனாளிகள் இந்த பூங்காவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்