பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை

பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை
பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை
x
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4ஆம் தேதி பழுதடைந்த தூக்குப் பாலத்தால் அங்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் பேருந்துகள் மூலமாக ராமேஸ்வரம் செல்கின்றனர். இந்நிலையில், பாம்பன் தூக்குப் பாலத்தை சீர்செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் முடிவடைந்த பின்னர் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்