கவுசல்யாவுக்கு எதிராக கிராம மக்கள் தீர்மானம்
கவுசல்யாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
உடுமலையில் ஆணவ கொலைசெய்யப்பட்ட சங்கரின் சொந்த ஊரான குமரலிங்கத்தில் கவுசல்யாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கவுசல்யா வீட்டில் வெளியாட்கள் வந்து தங்க போலீஸ் அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்களை ஊர்மக்கள் நிறைவேற்றி உள்ளனர். சங்கரின் ரத்தம் காய்வதற்குள் கவுசல்யா திருமணம் செய்துள்ளதாகவும், கவுசல்யா எடுக்கும் திடீர் முடிவுகளால், கலவரம் ஏற்படும்அபாயம் உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சங்கரின் பெயரை வைத்து கவுசல்யா இனி எதுவும் செய்ய கூடாது எனவும் ஊர்மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
Next Story

