கருணாநிதி சிலை : இன்று, சோனியாகாந்திதிறப்பு

கருணாநிதி சிலை : இன்று, சோனியாகாந்திதிறப்பு
கருணாநிதி சிலை : இன்று, சோனியாகாந்திதிறப்பு
x
சென்னை - அண்ணா அறிவாலயத்தில், கருணாநிதியின்  9 அடி உயர வெண்கலச் சிலையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி , ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனிடையே, கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி, சென்னை - அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில், அலங்கரிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்